தூத்துக்குடி சிப்காட் பகுதியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி சாமிநத்தம், தெற்கு வீரபாண்டியபுரம், லயனஸ்டவுன் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்க வந்திருந்தனர்.
அப்பொழுது அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,
ஸ்டெர்லைட் ஆலையால் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெற்று வருகின்றனர். நாளைய தலைமுறை மாணவர்கள் கையில் உள்ளது என்பதை அடிப்படையாக கொண்டு ஸ்டெர்லைட் ஆலை மாணவ-மாணவிகளுக்கு தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை கல்வி உதவி தொகை வழங்கி வருகிறது.
இதே போல மருத்துவ சேவையையும் செய்து வருகிறது. கண்புரை நோயாளிகள் 1,200 பேருக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்து அவர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் பல நன்மைகள் தான் கிடைத்து வருகிறது. எனவே தூத்துக்குடி மண்ணில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்றனர்.