சென்னை கூடுதல் தலைமை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் அவர்களின் கடித எண் :Sec (2)/19543/2020 நாள் : 03.09.2021-ல் தெரிவித்துள்ளபடி, 04.11.2021 அன்று வரவுள்ள தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில், இந்திய வெடிபொருள் சட்டம், 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008 மற்றும் வெடிபொருள் திருத்தம் விதிகள்
2019-ன்படி தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பமுள்ளவர்கள்; 30.09.2021-ம் தேதிக்குள் அரசு பொது இ-சேவை மையம் மூலம் இணைய வழி வாயிலாக கீழ்க்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
1. கட்டிட வரைபடங்கள் அசல்
2. கட்டிட உரிமைக்கான ஆவணம்/ வாடகை ஒப்பந்தப் பத்திரம் - அசல்
3. ரூ.500 /- அரசுக்கணக்கில் செலுத்திய செலுத்துச் சீட்டு - அசல்
4. அடையாள அட்டை ( பான்கார்டு, ஆதார் கார்டு, குடும்ப அட்டை )
5. ஊராட்சி ஃ நகராட்சியில் வரி செலுத்திய ஆவணங்கள்
6. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
இந்திய வெடிபொருள் சட்டம், 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008 மற்றும் வெடிபொருள் திருத்தம் விதிகள் 2019-ன் கீழ் உள்ள விதிமுறைகளின்படி, விண்ணப்பங்கள் பரீசீலனை செய்யப்பட்டு, தகுதியான மனுதாரர்களுக்கு தற்காலிக பட்டாசு கடை உரிமம் வழங்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.சு.கண்ணபிரான் தெரிவித்துள்ளார்கள்.