தூத்துக்குடியில் குழந்தைகளுக்கான இலவச இருதய அறுவை சிகிச்சை நல முகாம்.!


தூத்துக்குடி மாவட்டத்தில் ராஜேஷ் திலக் மருத்துவமனை, லயன்ஸ் கிளப் ஆஃப் தூத்துக்குடி சென்ட்ரல், மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து நடத்தும்  குழந்தைகளுக்கான இலவச இருதய அறுவை சிகிச்சை  முகாம் வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை  ராஜேஷ் திலக் மருத்துவமனையில் வைத்து நடைபெறுகிறது.

இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் சந்தித்த டாக்டர் நெவில் சாலமன் கூறுகையில் 

இந்தியாவில் ஆண்டுக்கு 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை குழந்தைகளுக்கு இருதய நோய் பிரச்சினை ஏற்படுகிறது இதனை சரியான நேரத்தில் கவனிக்க வேண்டும் ஏழை எளிய குழந்தைகள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அறுவை சிகிச்சை முகாமை நாங்கள் தொடங்கி இருக்கிறோம்.

மாவட்டத்தில் உள்ள இருதய நோய் குழந்தைகள் வந்து சிகிச்சை பெறலாம் அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு இலவசமாக சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் வைத்து அறுவை சிகிச்சை செய்யப்படும் இதுவரை 36 குழந்தைகள் பதிவு செய்துள்ளனர் இருதய பாதிப்பு குழந்தைகள் எவ்வளவு பேர் வேண்டுமானாலும் முகாமில் பங்கேற்கலாம் என்று டாக்டர்கள் கூறினர் 

பேட்டியின்போது மரு.ராஜேஷ் திலக், மரு. ஜாஸ்மின்,அப்பல்லோ மருத்துவமனை மேலாளர் ராஜ்குமார்,லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் முருக இசக்கி, தர்மசீலன், தங்கராஜன், ஜோசப் கிருபாகரன் ராஜேஷ் திலக் மருத்துவமனை மேலாளர் சங்கர் ஆகியோர் உடனிருந்தனர் 

Previous Post Next Post