"மேக் இன் இந்தியா, மேக் இன் தமிழ்நாடு" என்பதில், இனி "மேக் இன் தூத்துக்குடி" என்ற நிலை உருவாகும் என நம்பிக்கை வைத்துள்ளோம் - கனிமொழி கருணாநிதி எம்.பி.!*

நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மத்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் சார்பில் , “வர்த்தக மற்றும் வணிக வாரம்”; அனுசரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்  இந்தியாவின் ஏற்றுமதியினை உலகளவில் மேம்படுத்தும் நோக்கில் 

வெளிநாட்டு வர்த்தக இணை இயக்குநர் அலுவலகம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய அலுவலகமும் இணைந்து 


நடத்தும் ஏற்றுமதிக்கு வழிகாட்டும் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி  நடத்தப்பட்டது. 

இந்தக் கண்காட்சியை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி.கீதாஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

கண்காட்சியில் கயிறு உற்பத்தி, தீப்பெட்டி உற்பத்தி, கோவில்பட்டி கடலை மிட்டாய், கடல்சார் உற்பத்தி, ரசாயன தொழில்கள், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள ஏற்றுமதி வாய்ப்புகளை விளக்கும்  அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 

இந்த கண்காட்சியை தொடங்கி வைத்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசுகையில் ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தில் உள்ள தமிழகத்தை முதல் இடத்தில் கொண்டு வரும் வகையில் இந்த அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. 

அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் பர்னிச்சர் பார்க், டைடல் பார்க் போன்றவற்றிக்கான அறிவிப்பை  பிறப்பித்துள்ளது. 41000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கக் கூடிய வகையில் பல்வேறு புதிய தொழில் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் ஒரு ட்ரில்லியன் அளவுக்கு உற்பத்தி மேம்படுத்துவதற்கும் அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். 

மேக் இன் இந்தியா, மேக் இன் தமிழ்நாடு,என்பதை தாண்டி தூத்துக்குடி என்ற நிலை உருவாகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இக்கருத்தரங்கில்  ஏற்றுமதி குறித்த ஆலோசனைகள், வாய்ப்புகள் மற்றும் திட்ட விளக்கங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஸ்வர்னலதா, துணை மேலாளர் முரளிதரன், அகில இந்திய தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜோ பிரகாஷ், துடிசியா தலைவர் நேரு பிரகாஷ், தூத்துக்குடி மண்டலத்தின் தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் துணை பொது மேலாளர் சுந்தரேஷ்குமார், 

திருநெல்வேலி  பெல் குரூப் குணசிங் செல்லத்துரை, தொழில் அதிபர் தமிழரசன், உதவி இயக்குநர் தொழில் மையம் சாரிஸ், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் அலுவலர்கள், ஏற்றுமதி சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Previous Post Next Post