தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது அனைத்து துறை அலுவலர்களும் சமூக இடைவெளியுடன் உறுதி மொழி ஏற்றனர்.நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அமுதா ஆகியோர் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் சமூகநீதி நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் கீழ்கண்டவாறு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
*‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற அன்பு நெறியும் - ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்.!*
*சுயமரியாதை ஆளுமைத் திறனும் - பகுத்தறிவு கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்.*
*சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்.*
*மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்.*
*சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்.” என்று உறுதி மொழி எடுக்கப்பட்டது.*
இந்த உறுதி மொழியில் தூத்துக்குடி ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர சந்தீஸ், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம், சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து,
காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆய்வாளர்கள் ரமேஷ்பாபு, ஆழ்வார், மாவட்ட காவல்துறை அலுவலக நிர்வாக அலுவலர்கள் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.