வேலூர், திருப்பத்தூர் (ஜோலார்பேட்டை) திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட 28 இடங்களில் கேசி வீரமணி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வீரமணி வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் என பலர் திரண்டு வண்ணம் உள்ளனர்
திருப்பத்தூரில் மற்றும் ஜோலார்பேட்டை பகுதிகளில் மட்டும் சுமார் 14 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
1.திருப்பத்தூர் கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் அமைந்துள்ள ஹோட்டல் ஹில்ஸ் மற்றும்
2)ஏலகிரி மலையில் அமைந்துள்ள ஹோட்டல் ஹில்ஸ் ஆகும்
3) ஜோலார்பேட்டை காந்தி ரோட்டில் அமைந்துள்ள அமைச்சர் வீடு
4) பழைய ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி சாலையில் அமைந்துள்ள அமைச்சர் மற்றொரு வீடு
5) அமைச்சரின் அண்ணன் என காமராஜ் வீடு
6) அமைச்சரின் அண்ணனான அழகிரி வீடு
7) அமைச்சரின் குடும்பத்தைச் சார்ந்த பிடி மண்டி
8) தமலேரிமுத்தூர் பகுதியை சேர்ந்த முன்னாள் ஒன்றிய செயலாளர் ரமேஷ் அவரது வீட்டில்
8) திருப்பத்தூரில் அமைந்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ரமேஷ் அவரது வீட்டில்
9 ஏலகிரி கிராமத்தில் அமைந்துள்ள மகளிர் அணி தலைவியான சாந்தி வீட்டில்
10) ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி செல்லும் சாலையில் அமைந்துள்ள திருமண மண்டபம்
11) நாட்றம்பள்ளி மல்லகுண்ட பகுதியை சேர்ந்த மாவட்ட பொருளாளர் ராஜா என்பவரது வீட்டிலும் அதே போல்
12) நாட்றம்பள்ளி பகுதியைச் சார்ந்த ஒன்றிய செயலாளர் சாமராஜ் என்பவரது வீட்டில்
13) நாட்றம்பள்ளி கத்தாரி பகுதியை சேர்ந்த குட்லக் ரமேஷ்
14) ஜோலார்பேட்டை நகரச் செயலாளர் சீனிவாசன் வீட்டில் என சுமார் 14 வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.