சீனாவின் லூசோ பகுதியில் இன்று அதிகாலை ரிக்டர் அளவில் 6.0 ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, சீனாவின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளதாவது: சீனாவின் லூசோ பகுதியில் இன்று (செப்., 16) அதிகாலை 4:33 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் லூசோ பகுதியில் உள்ள கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டது. வீட்டின் கூரைகள் சரிந்தன. இடிபாடுகளில் சிக்கி மூவர் பலியாகினர். மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தற்போது மாகாண அரசு நிலநடுக்க எச்சரிக்கை விடுத்ததோடு, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டடங்கள் இடிந்துள்ளதால் அதில் சிக்கியவர்களில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.