சாத்தான்குளம் அருகே பட்டாசு வைத்திருந்த கார் வெடித்து சிதறி 40 வீடுகள் சேதம் - எஸ்.பி ஜெயக்குமார் நேரில் விசாரணை.!





தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே  இடைச்சிவிளை குமரன் விலையைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே அணைக்கரையில் அரசு அனுமதி பெற்று வானவெடி மற்றும் கல்வெடி தயாரிப்புக் கூடம் நடத்தி வருகிறார்.

திருமணம் மற்றும் விழாக்களுக்கு ஆர்டரின் பேரில் பட்டாசு தயாரித்து அதனை காரில் கொண்டு சென்று வழங்குவது வழக்கம் இந்நிலையில் திருமண விழாவுக்கு வழங்குவதற்காக 30 ஆயிரம் மதிப்பிலான வாண வெடிகளைகுடோனில் இருந்து காரில் ஏற்றிக்கொண்டு நேற்று அதிகாலை 2 மணி அளவில் சாத்தான்குளம் அருகே இடைச்சி வேளையில் தனது வீட்டிற்கு கொண்டு சென்றார்.

ரிமோட் மூலம் கார் கதவை மூடிய நிலையில் வீட்டுக்கு சென்றால் பின்னர் சிறிது நேரத்தில் கதவு பூட்டப்பட்டு உள்ளதா என்பதை சோதனை செய்யும் வகையில் வீட்டின் வாசல் அருகே இருந்தவரிடம் ரிமோட் இயக்கி சோதனை செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது வீட்டின் வெளியே நிறுத்தி இருந்த காரில் வைத்திருந்த வான வெடிகள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது இதில் கார் எஞ்சின் மற்றும் உதிரிபாகங்கள் சுக்குநூறாக நொறுங்கி சேதமடைந்தன.

இச்சம்பவத்தில் பாலகிருஷ்ணன் கையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன் அதிகாலை நேரத்தில் யாரும் பட்டாசுகளும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் உள்ள சுமார் 40 வீடுகள் வெடிப்பு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த திறந்து வெளியே ஓடிவந்தனர் தகவல் அறிந்து விரைந்து வந்த மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார்,சாத்தான்குளம்  டி.எஸ்.பி கண்ணன் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் முரளிதரன் திருச்செந்தூர் சாத்தான்குளம் தாசில்தார் அரசூர் பஞ்சாயத்து தலைவர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

முதல் கட்ட விசாரணையில் பாலகிருஷ்ணன் அரசு அனுமதி பெற்று வானவெடி தயாரித்து வந்த போதிலும் அனுமதியின்றி வாணவேடிக்கைகள் கொண்டிருக்கும் போது இச்சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது 

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தட்டார்மடம் போலீசார் வாணவெடி தயாரிப்பாளர் பாடகர் கைது செய்தனர் இருப்பினும் விபத்தில் காயமடைந்த அவரை சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Previous Post Next Post