குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் 10 ஆயிரம் மதிப்புள்ள ஹெராயின் பிடிபட்ட விவகாரம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இந்த விவகாரம் தொடர்பாக கணவன்-மனைவியை கைது செய்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்..
முந்த்ரா துறைமுகத்தில் வந்த கண்டெய்னர்களில் ஹெராயின் இருப்பதாக கிடைக்க ரகசிய தகவல்களின் அடிப்படையில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். ஒரு கன்டெய்னரில் 2 ஆயிரம் கிலோ ஹெராயினும், மற்றொரு கன்டெய்னரில் ஆயிரம் கிலோ ஹெராயினும் இருந்தது. இந்த இரு கன்டெய்னர்களும் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்தவை என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..
இந்தப் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக அகமதாபாத், டெல்லி, சென்னை, காந்திதாம், மாண்டவி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த இரு கன்டெய்னர்களிலும் உள்ள ஹெராயின் போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ. 20 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. சிக்கிய 2 பேரும் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது தான் அதிர்ச்சி தகவல்..
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையைச் சேர்ந்த தம்பதி சுதாகர், வைஷாலி ஆகியோரின் பெயரிலேயே கண்டெய்னர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட 3 டன் ஹெராயினை நாட்டின் பல பகுதிகளுக்கும் கடத்த அவர்கள் திட்டமிட்டிருந்துள்ளனர். உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்த ஹெராயின் கடத்தலுக்கு ஆப்கன் தீவிரவாதிகள் பின்னணியில் இருக்கலாம் என்கிற சந்தேகமும் உள்ளது…