தூத்துக்குடி துாய பனிமய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு நாளை (ஆக.5) மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது:
தூத்துக்குடி துாய பனிமய மாதா திருத்தலப் பேராலய திருவிழா நிறைவு நாள் ஆகஸ்ட் 5ம் நாள் கொண்டாடப் படுவதை முன்னிட்டு 05.08.2021 வியாழக்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
எனினும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலவாணி முறிவுச் சட்டத்தின்படி (Negotiable Instrument Act) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பனிமயமாதா கோவிலில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் சப்பர பவனிகள் ஏதும் நடத்தப்பட மாட்டாது எனவும் கோவிலின் உள்ளாக நடத்தப்படும் ஆராதனை நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்கள் பங்கேற்பின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப் படுகிறது.
மேற்படி நாளில் பனிமய மாதா திருக்கோவிலில் நடைபெறும் அனைத்துவித ஆராதனை நிகழச்சிகளும் உள்ளூர் தொலைக் காட்சிகளிலும், யூடியூப் சேனல்கள் மூலமும் ஒளிபரப்பு செய்ய மாதா கோவில் நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தத்தம் வீடுகளில் இருந்து நிகழ்ச்சி களை கண்டுகொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்குப் பதிலாக 07.08.2021 அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது.