''அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது பல கோடி ஊழல் புகார் காரணமாகவே லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது, அரசியல் காழ்புணர்ச்சி காரணம் அல்ல " என்றும்
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தின்கீழ் பொதுமக்கள் அளித்த மனுவில் தூத்துக்குடி மாவட்டத்தில் 72 சதவிகிதம் தீர்வு காணப்பட்டுள்ளது, என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்
தூத்துக்குடியில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் தொடர்பான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி அண்ணா திருமணம் மண்டபத்தில் வைத்து மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு 3500 பயனாளிகளுக்கு 6 கோடியே 67 லட்சம் மதிப்பிள் பல்வேறு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக அகில இந்திய கப்பல் மாலுமிகள் தலைமையக பொது செயலாளர் அப்துல் கனி செராவ் உத்தரவின் படி புன்னக்காயல் பகுதி மக்கள் குடிநீர் வசதிக்காக மாலுமிகள் சங்கம் சார்பில் ஏற்கனவே 72 லட்சம் கொடுக்கப்பட்ட நிலையில் 31 லட்சம் காசோலையை கலெக்டர் செந்தில் ராஜ், அமைச்சர் கீதாஜீவன் ஆகியோருடன் தூத்துக்குடி கப்பல் மாலுமிகள் சங்க தலைவர் ஜூடுதாசன் முன்னிலையில் வழங்கினார்கள்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதாஜீவன் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தின்கீழ் பொதுமக்கள் அளித்த மனுவில் தூத்துக்குடி மாவட்டத்தில் 72 சதவிகிதம் தீர்வு காணப்பட்டுள்ளது, சாலை குடிநீர் வசதிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வருமான வரித்துறையினர் முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் சோதனை நடத்துவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த கருத்து குறித்து கேட்டதற்கு
அரசியல் காழ்புணர்ச்சி என்றால் எல்லா அமைச்சர் வீட்டிலுமா சோதனை நடக்கிறது? யார் மீது புகார் இருக்கிறதோ அவர்கள் மீது சம்மந்தப்பட்ட துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை அரசியல் காழ்புணர்ச்சி என்றால்....34 பேர் மீதுமா நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றாா்.
விழாவில் மகளிர் திட்ட இயக்குனர் பிச்சையா,மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம்,வட்டாட்சியர் ஜஸ்டின் செல்லதுரை திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சுபேந்திரன், வட்ட செயலாளர்கள் டென்சிங், கங்கராஜேஷ், மீனாட்சி சுந்தரம், முன்னாள் கவுன்சிலர் செந்தில் குமார் மற்றும் அல்பர்ட் மணி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.