புதிய மீன்பிடி சட்டத்திருத்த மசோதா: தூத்துக்குடியில் மீனவர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்.!


மத்திய அரசின் புதிய மீன்பிடி சட்டத்திருத்த மசோதா 2021 கண்டித்தும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் புதிய மீன்பிடி சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய கோரியும் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள் வேலைநிறுத்தம் காரணமாக கடலுக்கு செல்லாமல் துறைமுகத்தில் படகுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

பெரியதாழை முதல் வேம்பார் வரை உள்ள தூத்துக்குடி மாவட்ட கடற்கரை கிராமங்களில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் மீன்பிடி சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக என்று கருப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர். 

வேலை நிறுத்த போராட்டத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப்படகுகள் மூலம் அரசுக்கு கிடைக்கும் ஒருநாள் வருமானம் சுமார் ரூ.4 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

Previous Post Next Post