தாய்ப்பால் விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் அமைச்சர் கீதாஜீவன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.!


உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு வாகனத்தை தூத்துக்குடியில் சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

மேலும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் நடந்த தாய்மார்களுக்கு நடமாடும் பிரச்சார வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சார வாகனத்தினை அமைச்சர் கீதாஜீவன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 

தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில்

தாய்மார்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடபடுகிறது. பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியம், மேம்பாட்டுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் தாய்ப்பாலில் மட்டுமே சரி விகிதத்தில் உள்ளன. தாய்ப்பால் ஊட்டுவது தாயின் உடல்நலத்துக்கு மிகவும் நல்லது. 

குழந்தைகளின் சிறப்பான வளர்ச்சி உடல்நலனுக்குப் பிறந்தது முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என உலகளவில் பரிந்துரைக்கப்படுகிறது அதன் பிறகு தாய்ப்பாலுடன் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த கூடுதல் உணவு முறையை பின்பற்ற வேண்டும்.  

தூத்துக்குடி மாவட்டத்தில் உலக தாய்ப்பால் வார விழா இன்றை தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு தனியாக பிரசார வாகனத்தின் மூலம் பிரசாரம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 

இது போல சமூக நலத்துறையின் மூலம் பெண்களிடையே விழிப்புணர்வு தாய்பாலின் முக்கியத்துவத்தை எடுத்து கூற வேண்டும். தாய்ப்பால் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை முதல்வர் நேரு, உரைவிட மருத்துவர் சைலேஷ், மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.குமரன், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post