தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் திருநெல்வேலி சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சட்டம் ஒழுங்கு குறித்து காவல்துறை உயரதிகாரிகளுடன் தமிழக காவல்துறை கூடுதல் இயக்குனர் தாமரைக்கண்ணன், தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
ஆய்வுக்கூட்டத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சி ஆகிய பகுதிகளில் ரவுடிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் வருகிற விநாயகர் சதுர்த்தி, இம்மானுவேல்சேகரன் குருபூஜை மற்றும் ஒண்டிவீரன் ஜெயந்தி ஆகிய நிகழ்ச்சிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை தென் மண்டல காவல்துறை தலைவர் அன்பு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவீன்குமார் அபிநபு, திருநெல்வேலி மாநகர ஆணையர் செந்தாமரைக்கண்ணன், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்,
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், திருநெல்வேலி மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சுரேஷ்குமார், திருநெல்வேலி மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் சுரேஷ்குமார் அவர்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.