தூத்துக்குடியில் காய்கனி மார்க்கெட் சிக்னலில் வியாபாரிகள் திடீர் சாலை மறியல்.!


தூத்துக்குடியில் காய்கனி மார்க்கெட் சிக்னலில் வியாபாரிகள் திடீர் சாலை மறியல்.!

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து தரப்பினரும் வந்துசெல்லும் பழமையான காமராஜர் காய்கனி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. 

அப்பகுதியிகள் உள்ள சாலையில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு பிரதான மெயின் பாதைகள் இரண்டு இருந்து வருகின்றன. அதில் ஒரு பாதையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் உள்ள சிறு, குறு விவசாயிகள்

தங்களது விளைநிலந்களில் விளைந்த வாழை, உள்ளிட்ட அனைத்து வகையான காய்கனிகள் தினமும் சிறிய நடுத்தர, கனரக வாகனம் மூலம் மொத்தவிற்பனை மற்றும் சில்லறை விற்பனைக்காக இந்த மார்க்கெட்டிற்கு தினமும் கொண்டு வருகின்றனர். 

அதன் மூலம் பல வியாபாரிகள் தொழிலாளர்கள் பொதுமக்கள் குறைந்த விலையில் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். உற்பத்தி செய்து கொண்டு வரும் விவசாயிகளுக்கும் நல்ல விலைக்கு பொருட்களை வாங்குகின்றனர். 

மாநகராட்சி மூலம் செயல்படுத்தும் புதிய கான்கிரீட் சாலையில் மத்தியில் தடுப்புச்சுவர் அமைத்து சாலை போடுவதால் வெளியில் இருந்து விவசாயிகள் கொண்டு வரும் இடுபொருட்களின் வாகனங்கள் மார்க்கெட்டிற்கு கொண்டு வர இயலாத நிலை ஏற்படும். 

அதை மாநகராட்சி நிர்வாகம் அந்த குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தடுப்புச் சுவர் இல்லாமல் சாலைகள் அமைக்க வேண்டும் என்று மார்க்கெட் நிர்வாகத்தின் சார்பில் கோரிக்கை விடுத்திருந்தனர். 

திடீரென மீண்டும் தடுப்புச் சுவர் கட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டதால் காமராஜர் காய்கனி மார்க்கெட் தலைவர் சி.த.சுந்தரபாண்டியன் தலைமையில் பாளை மெயின் ரோட்டில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுடன் அமர்ந்து தடுப்புச்சுவர் திட்டத்தை கைவிட வேண்டும் என்று மறியல் போராட்டம் நடத்தினார். அவருடன் 

மார்க்கெட் மேலாளர் நியூட்டன், துணை மேலாளர் ரவி, மற்றும் பிச்சமுத்து, செல்வகுமார், ரவி, ராஜாசிங், பிரபாகர், ஞான்ராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேரும் பெருமாள் மத்திய பாகம் காவல் ஆய்வாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறியல் போராட்டத்தை கைவிடச் செய்தனர். 

பின்னர் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீயை சந்தித்த நிலையில் ஆணையர் சாருஸ்ரீ பிரச்சனைக்குரிய இடத்தை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தபின் உங்களது கோரிக்கையை நிறைவேற்றி தருவேன். உங்களுடைய தொழில் பாதிக்காத வகையிலும் பொதுமக்கள் நலன் கருதியும் நல்ல முடிவை எடுப்பேன் என்று ஆணையர்  சாருஸ்ரீ கூறினார். 


Previous Post Next Post