தூத்துக்குடியில் காவலர் குடியிருப்பு - காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.!


தூத்துக்குடி மாவட்டத்தில் ரூபாய் 5.64 கோடியில் புதிதாக கட்டப்பட்ட தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய காவலர் குடியிருப்பை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இன்று காணொளி மூலம் திறந்து வைத்தார்.  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  இன்று காவலர் குடியிருப்பை ரிப்பன்வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.

தமிழக அரசு உத்தரவின்பேரில் திருநெல்வேலி கோட்டம் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் ரூபாய் 5.64 கோடி செலவில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய காவலர்களுக்கு, 

தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 35 காவலர் குடியிருப்புகளை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இன்று காணொளி மூலம் திறந்து வைத்தார்.

அதன்படி புதிதாக கட்டப்பட்ட 3 ஆய்வாளர் குடியிருப்புகள், 9 உதவி ஆய்வாளர் குடியிருப்புகள் மற்றும் 23 காவலர் குடியிருப்புகள் என மொத்தம் 35 காவல்துறை குடியிருப்புகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பார்வையிட்டு காவலர் குடியிருப்பில் ரிப்பன்வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.

நிகழ்ச்சியின் போது தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத்தின் உதவி செயற்பொறியாளர்  குமரேசன், இளநிலை உதவி பொறியாளர் சுசித்ரா தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன், தென்பாக குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் பழனிச்சாமி, 

தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் சிவக்குமார்,  உதயலெட்சுமி, தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஞானராஜ், ஊரக உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் நம்பிராஜன், தென்பாகம் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் மாரிக்குமார் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Previous Post Next Post