தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை பேரூராட்சியில் சுற்றுலா துறையின் மூலம்ரூ.1 கோடி மதிப்பிலான வெட்டுவான் கோவில் முதல் உச்சி பிள்ளையார் கோவில் வரை கைப்பிடிகள் மற்றும் படிக்கட்டுகள் அமைத்தல் என பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு சமூகநலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டினார்.
இதே போல் கயத்தார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காமநாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூ.15 லட்சம் மதிப்பிலான 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான பணியினை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்
"மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று உள்ளது குறிப்பாக வயதானவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாகவும் மேலும் கிராம மக்களுக்கு பயனுள்ள திட்டமாக அமைந்துள்ளது
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில் 72% சதவீதம் மனுக்கள் மீது நடவடிக்கை வைக்கப்பட்டுள்ளது.மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது
தமிழக முதல்வராக ஸ்டாலின் ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து இருந்து ஏழை எளிய மக்கள் நலன் காண வேண்டும் எனவும் குறிப்பாக பெண்கள் பாதுகாப்பிற்கு சட்டம் ஒழுங்கு சீராக இருக்க வேண்டும் எனவும்,
தமிழ்மொழி வளர்ச்சி அடையவேண்டும் தமிழக மக்களின் வளர்ச்சிக்கு முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற முனைப்போடு தமிழக முதல்வர் பணியாற்றி வருகிறார்
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு கடந்த ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தங்கத்தின் அளவையும், நிதியை உயர்த்தினார்கள்.
ஆனால் நிதி ஒதுக்கீடு முறையாக செய்யாததால், கிட்டத்தட்ட 3.34 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இது துறையின் ஆய்வில் உள்ளது.
கரோனா 3-வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆடி அமாவாசை தினத்தில் மக்கள் கோயிலில் கூடுவார்கள் என்பதற்காகத்தான் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதில், பாஜக யாத்திரை செல்வோம் என்பது முறையே கிடையாது. இது அவர்களுக்கு தெரிய வேண்டும், என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.கண்ணபிரான், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன், மாவட்ட சுற்றுலா அலுவலர் சீனிவாசன் உதவி இயக்குனர் பேரூராட்சிகள் குற்றாலிங்கம் கழுகுமலை பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.