இந்திய அளவில் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி முதல் பத்து இடங்களில் இடம் பிடித்து சாதனை- கல்லூரி முதல்வர் வீரபாகு தகவல்.!



இந்திய அளவில் மிகச்சிறந்த வல்லுனர்களை கொண்டு இந்தியா டுடே இதழ் 1559 கல்லூரிகளை தர நிர்ணயம் செய்ததில் வ.உ.சிதம்பரம் கல்லூரி முதல் பத்து இடங்களில் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளது என கல்லூரி முதல்வர் சி.வீரபாகு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கல்லூரியின் முதல்வர் சி.வீரபாகு செய்தியாளர்களிடம் பேசுகையில் : தூத்துக்குடி மாநகரில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரம் கல்லூரி 70 ஆண்டுகளுக்கு மேலாக கல்வியை சேவையாக செய்து வருகின்றது. 

வ.உ. சிதம்பரம் கல்லூரி கல்வி துறையில் பல சாதனைகள் செய்து வருகின்றது. இந்திய  அளவிலான அரசு கல்வி தர நிறுவனங்களும் மற்றும் தனியார் தர நிறுவனங்களும் வ.உ.சிதம்பரம் கல்லூரியின் கல்வி தரத்தை பாராட்டி பல விருதுகளை வருடந்தோறும் வழங்கி வருகின்றன.

இந்திய நாட்டின் கல்வி நிறுவனங்களின் தரத்தை நிர்ணயம் செய்யும் NIRF நிறுவனம் (தேசிய தர நிர்ணய கட்டமைப்பு) 2020 ஆம் ஆண்டு வ.உ.சிதம்பரம் கல்லூரியின் கல்வி தரம் மற்றும் இதர கல்வி சார்ந்த பணிகளை தர நிர்ணயம் செய்து இந்திய அளவில் 68ஆம் இடம் கிடைத்தது 

வ.உ.சிதம்பரம் கல்லூரிக்கு பெருமை.

தற்போது இந்தியா டுடே இதழ் ஜூன் 2021 ஆம் ஆண்டு இந்திய அளவில் மிகச்சிறந்த வல்லுனர்களை கொண்டு 1559 கல்லூரிகளை தர நிர்ணயம் செய்ததில் வ.உ.சிதம்பரம் கல்லூரி முதல் பத்து இடங்களில் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளது.

குறைந்த கல்வி கட்டணம் என்ற அடிப்படையில் வணிக நிர்வாகவியல் பாடப்பிரிவுக்கு இந்திய அளவில் 4 ஆம் இடம் கிடைத்துள்ளது. மேலும் கலை தொடர்பான பாடங்களுக்கு 5 ஆம் இடமும் அறிவியல் தொடர்பான பாடங்களுக்கு 6 ஆம் இடமும் கிடைத்துள்ளது. 

கல்வி கட்டணத் தொகைக்கு கிடைக்கும் சிறப்பான கல்வி என்ற அடிப்படையில் வ.உ.சிதம்பரம் கல்லூரியின் வணிகவியல் பாடப்பிரிவுக்கு 5 ஆம் இடமும் வணிக நிர்வாகவியல் பாடப்பிரிவுக்கு 6 ஆம் இடத்தையும் இந்தியா டுடே இதழ் வெளியிட்டது வ.உ.சிதம்பரம் கல்லூரிக்கு அங்கீகாரம்.

ஒட்டுமொத்த செயல்பாடுகளை ஆராய்ந்து அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு 65 ஆம் இடமும் வணிக நிர்வாகவியல் பாடபிரிவுக்கு 101 இடமும் கலை பாடபிரிவுகளுக்கு 107 இடமும் வணிகவியல் பாடபிரிவுக்கு 113 இடமும் அகில இந்திய அளவில் அளித்து இக்கல்லூரியை இந்திய டுடே இதழ் கெளரவப்படுத்தியுள்ளது.

வ.உ.சிதம்பரம் கல்லூரியின் பெருமைகளுக்கு மேலும் ஒரு அடையாளமாக இந்திய நாட்டின் புகழ்பெற்ற ஆங்கில இதழான "தி வீக்” இதழ் வ.உ.சிதம்பரம் கல்லூரியை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திரா மாநிலங்களை உள்ளடக்கிய 

தென் தமிழகத்தின் சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக அங்கீகரித்துள்ளது.  "தி வீக்” இதழ் வ.உ.சிதம்பரம் கல்லூரியின் கலை பாடப்பிரிவுகளுக்கு 15 வது இடமும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு 20வது இடமும், வணிகவியல் பாடபிரிவுகளுக்கு 24வது இடமும் அளித்துள்ளது.


மேலும் தி வீக் இதழ் வ.உ.சிதம்பரம் கல்லூரியின் கலை பாடபிரிவுகளுக்கு இந்திய அளவில் 47 வது இடமும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு 43 வது இடமும், வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு 51 வது இடமும் அளித்து இந்திய அளவில் இக்கல்லூரியை அங்கீகரித்து முன்னிறித்தியுள்ளது. 

வ.உ.சிதம்பரம் கல்லூரியின் நிறுவன செயலர் குலபதி ஏ.பி.சி.வீரபாகு அவர்களின் "கல்வி ஒரு பொழுதும் வணிகமயமாக்கப்பட கூடாது” என்ற கொள்கையை இன்றைய கல்லூரி செயலர் ஏ.பி.சி.வீ. சொக்கலிங்கம் வழிகாட்டுதலின் படி கல்லூரி நடைபெற்று கொண்டிருக்கின்றது. இந்த வெற்றிக்கு காரணமாக இருக்கின்ற நிர்வாகக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா அலுவலர்கள் ஆகிய அனைவரின் பங்களிப்பும் அளப்பரியது என தெரிவித்தார்.

Previous Post Next Post