தூத்துக்குடி மாவட்டத்தில் கொரானா தொற்று காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் திடீரென்று பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரானா தொற்று பரவ தொடங்கியடைத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற இடங்களில் 200 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இவர்கள் பணி செய்து வந்த நிலையில் தற்போது திடீரென்று பணிக்கு வர வேண்டாம் என்று உத்தரவு வந்துள்ளதை அடுத்து தங்கள் குடும்ப சூழ்நிலையும்,பணி சூழ்நிலையும் கருத்தில் கொண்டு தங்களுக்கு மீண்டும் பணி அமர்த்த கோரி பாதிக்கப்பட்ட செவிலியர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.