கைலாசபுரத்தில் தனியார் சிமெண்ட் அரைக்கும் ஆலை; மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த கருத்து கேட்பு கூட்டம்!


தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவிற்குட்பட்ட கைலாசபுரம் கிராமத்தில் 'ஜாசன் இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட்' கம்பெனியின் சிமெண் அரைக்கும் உற்பத்தி ஆலை அமைய உள்ளது. 

இந்த ஆலையை அப்பகுதியில் அமைப்பது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் டாக்டர்.செந்தில்ராஜ் தலைமையில் இக்கூட்டம் நடத்தப்பட்டது.

முன்னதாக, சிமெண்ட் ஆலையின் உற்பத்தி குறித்தும் ஆலையின் அதிகாரிகள் பொது மக்களுக்கு விளக்கம் அளித்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் தங்களின் கருத்துக்களைக் கூறினர். 

கூட்டத்தில் மாசுகட்டுப்பாட்டுவாரிய பொறியாளர் சத்யராஜ்  ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் முத்து, மற்றும் அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

முன்னதாக ஓட்டப்பிடாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார் இந்த ஆய்வின் போது ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் முத்து  மருத்துவர்கள் ஜீவராஜ், ஜெயபிரபா ஆகியோர் உள்ளனர்.

Previous Post Next Post