திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 8 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் கோயிலில் வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 8 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் பக்தர்களுக்கு சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
அதிகாலை 6 மணி முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளின் படி கடலில் புனித நீராடவும் நாழி கிணறு தீர்த்தத்தில் புனித நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.