பட்ஜெட் உரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:-
சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு புத்துயிர் அளிக்கப்படும். 2010-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் இருக்கும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3-ந்தேதி ரூ.10 லட்சம் ரொக்க தொகையுடன் வழங்கப்படும்.
நிர்வாகம் மக்களை சென்றடைய வேண்டுமென்றால் அரசு தனது பணிகளை மக்களின் மொழியில் செயல்படுத்த வேண்டும். இதுதொடர்பாக தலைமை செயலகம் முதல் மாநிலத்தின் அனைத்துதுறை அலுவலகங்கள் வரை தமிழை ஆட்சி மொழியாக பயன்படுத்துதல் வலுப்படுத்தப்படும்.
தமிழ் இணைய கல்வி கழகத்தால் உருவாக்கப்பட்ட யூனிகோடு பாண்ட் அனைத்து அரசு துறையிலும் பயன்படுத்துவது உறுதி செய்யப்படும்.
தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மக்களின் குறைகளை தீர்க்க உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து 4 லட்சத்து 57 ஆயிரத்து 645 மனுக்கள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அந்த மனுக்களை பரிசீலித்து எடுத்து சரி பார்த்து 2 லட்சத்து 29 ஆயிரத்து 216 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
நம் மண் சார்ந்த மரங்களை நடுவதற்கு பெரும் மரம் நடவுத் திட்டம் ஒன்று அடுத்த 10 ஆண்டு காலத்தில் செயல்படுத்தப்படும்.
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு.
சீர்மிகு நகரங்களின் திட்டத்திற்கு ரூ.2,350 கோடி ஒதுக்கீடு.
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் வடிகாலுக்கு ரூ.87 கோடி நிதி ஒதுக்கீடு....
எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு திட்டத்துக்கு மீண்டும் ரூ.3 கோடி நிதி வழங்கப்படும்.
தமிழக அரசின் பட்ஜெட்டில் நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.17,899.17 கோடி நிதி ஒதுக்கீடு.
நகரம் சார்ந்த அறிவிப்புகள்...
ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடைத் திட்டம்
திருச்சியில் புதிதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் அமைக்கப்படும்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.2,350 கோடி ஒதுக்கீடு.
சென்னையில் உள்ள காசிமேடு துறைமுகத்தை மேம்படுத்த ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு
சிங்கார சென்னை 2.0 பணிகள் தொடங்கப்படும்
சென்னை, சுவரொட்டிகள் இல்லாத நகரமாக மாற்றப்படும்
சென்னையில் 3 இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்ட ரூ.335 கோடி நிதி ஒதுக்கீடு.