முறப்பநாடு கொலை வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது.!



தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லநாடு நாணல்காடு பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் இசக்கிபாண்டி (22) என்பவரை முன்விரோதம் காரணமாக நாணல்காடு தாமிரபரணி ஆற்றுபாலத்தில் வைத்து 12.09.2019 அன்று அரிவாளால் தாக்கி கொலை செய்யப்பட்டார். 

இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இவ்வழக்கில் 16 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் இவ்வழக்கின் 2வது எதிரியான வல்லநாடு பக்கப்பட்டியைச் சேர்ந்த சுப்பையா மகன் மாரிமுத்து (26) என்பவர் மட்டும் கடந்த 2 வருடங்களாக தலைமறைவாக இருந்துவந்தார்.

கடந்த 2 வருடங்களாக தலைமறைவாக உள்ள கொலை வழக்கு எதிரியை கைது செய்ய தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னரசு மேற்பார்வையில் 

முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள்  ராஜாராபர்ட்,  ஜெயராம சுப்பிரமணியன், தலைமைகாவலர்  சுந்தரராஜன், முதல் நிலை காவலர்கள்  சதீஷ் தணிகைராஜா, சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் மேற்படி தனிப்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று வல்லநாட்டிலிருந்து பக்கப்பட்டிக்கு பேரூந்தில் சென்று கொண்டிருந்த தலைமறைவாக இருந்த எதிரி மாரிமுத்து என்பவரை தனிப்படை போலீசார்  கைது செய்தனர்.

கடந்த 2 வருடங்களாக தலைமறைவாக இருந்த கொலை வழக்கு எதிரியை கைது செய்த மேற்படி தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.

Previous Post Next Post