தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு- தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடை.
மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி.
அனைத்து தரப்பு கருத்துக்களைப் பெற்று ஆய்ந்து, செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9,10,11,12 ஆம் வகுப்புகள் 50% மாணவர்களுடன் தொடங்க உத்தேசம்.
பள்ளிகள் உரிய கொரோனா கட்டுபாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழக அரசு உத்தரவு.
இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு திறந்தவெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசு.