உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சுவாமி தரிசனம் செய்தார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழக முதல்வரின் நடவடிக்கைகளால் கொரோனா தொற்று குறைந்து வருகிறதாக தெரிவித்த அவர் கொரோனா தொற்றின் மூன்றாம் கட்ட அலை பரவும் என எதிர்பார்க்கக் கூடிய நிலையில் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
மேலும் பெற்றோர்கள் அச்சம் தவிர்த்து தைரியத்துடன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்ட அவர் மருத்துவர்களிடமும், பெற்றோர்களிடமும் கருத்து கேட்ட பின்னரே பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தக்கூடாது என்ற கருத்துக்களே அதிகம் வருவதாக தெரிவித்த அவர் சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வரின் முடிவுகளின் படியே நீட் தேர்வு குறித்த நடவடிக்கை இருக்கும் என்றார்.
தமிழகத்தில் நீதிமன்ற உத்தரவின்படி தனியார் பள்ளிகளில் தவணை முறையில் கட்டணம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றும்
40% கட்டணம் முதல் தவணையாகவும் , 35% கட்டணம் இரண்டாம் தவணையாகவும் செலுத்துவதற்கான உத்தரவினை நடைமுறைப்படுத்த தனியார் பள்ளிகளுக்கு சுற்றரிக்கை அனுப்பப்படும் என தெரிவித்தார்.