தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்யக்கூடாது – அமைச்சர் கீதாஜீவன் பேச்சு.!


தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பு தூத்துக்குடி மாவட்ட குழு  சார்பில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா போன்ற பொருட்களை விற்கமாட்டோம் என்ற உறுதிமொழி ஏற்பு விழிப்புணர்வு  பிரச்சார நிகழ்ச்சி தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு நடைபெற்றது  

நிகழ்ச்சியில் மத்திய மாவட்டதலைவர் சோலையப்பராஜா தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் வெற்றி ராஜன் முன்னிலை வகித்தார். 

உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்,  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு உறுதி மொழியினை துவக்கி வைத்தார் 

தொடர்ந்து அவர் பேசுகையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதைப் பொருட்களை விற்பனை செய்ய மாட்டோம் என்று வியாபாரிகள் முடிவெடுத்து இருப்பது வரவேற்கத்தக்கது. 

எதிர்கால மாணவர்களின் வாழ்வை பாதிக்கும் வகையில் உள்ள பொருட்கள் அனைத்தையுமே மக்களும் பயன்படுத்தக்கூடாது. இந்த நல்ல விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்ட வியாபாரிகளை மனதார பாராட்டுகிறேன் என்றார். 

தொடர்ந்து வியாபாரிகள் அனைவரும் தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யமாட்டோம் என்று உறுதிமொழி எடுத்தனர். 

நிகழ்ச்சியில் ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தலைவர் அன்புராஜ். செயலாளர் செந்தில்குமார். பொருளாளர் மரகதவேல். 3ம் மைல் வியாபாரிகள் சங்கத்தலைவர் ஜெயபாலன், 

செயலாளர்கள் மோகன்ராம், செல்வம் மகளிர் அணி அமைப்பாளர் ராஜம் மற்றும் நிர்வாகிகள் ரமேஷ், செல்வன், ஆனந்த். மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் மாரியப்பன், டி.எஸ்.பி. கணேஷ். 

மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன். இளைஞரணி செயலாளர் ஆனந்த கபேரியல் ராஜ், துணை செயலாளர் அருண் சுந்தர். பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன். இலக்கியணி துணை செயலாளர் தனபால். வட்டச்செயலாளர் சாரதி. வட்ட பிரதிநிதி சுப்பையா உள்பட வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். 

Previous Post Next Post