தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில் துறை வளர்ச்சி மாவட்ட அளவிலான ஆய்வு கூட்டம் எம்.பி,அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்றது .!


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில் துறை வளர்ச்சி மாவட்ட  அளவிலான ஆய்வு கூட்டம்  தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு  தலைமையில்  தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்  ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் /கூடுதல் ஆட்சியர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் துவங்க தேவையான அடிப்படை வசதிகள் உள்ளது என்பது குறித்தும், தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் தூத்துக்குடி மாவட்டத்தில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமைத்தல் பணிகள், உடன்குடி பவர் புரெஜக்ட் மற்றும் இங்கு புதிதாக நடைபெற்று வரும் தொழில்சாலைகள் தொடர்பாகவும், தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாகவும் எடுத்துரைத்தார். 

இக்கூட்டத்தில்  தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: 

தூத்துக்குடி மாவட்டத்தில்  தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின்படி தொழில்களை அதிகப்படுத்திட ஆய்வுக்கூட்டம் நடத்தப்படுகிறது. கொரோனா பெருந்தொற்றை திறம்பட சமாளித்த  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வளர்ச்சி திட்ட பணிகளை தொடர்ந்திட  அறிவுறுத்தி உள்ளார்கள். 

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சிக்காக வரும் காலங்களில் என்னென்ன திட்டங்களை செயல்படுத்தலாம் என ஆய்வு செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்படுவதற்கு முன்பு திருநெல்வேலிஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தது. 

இது ஆதி காலம் தொட்டு தொழில் வளர்ச்சி மட்டுமின்றி வரலாற்று பெருமையும் கொண்ட மாவட்டம் ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளது. மேலும் தொழில் தொடங்க தேவையான நிலங்களும் உள்ளது.  

முதலமைச்சராக முத்தமிழ் அறிஞர் கலைஞர் இருந்தபோது மதுரை, தூத்துக்குடி இன்டஸ்டிரியல் காரிடர் திட்டத்தினை கொண்டு வந்தாhக் ள். அத்திட்டம் தொய்வடைந்து இருந்தது. வரும் காலங்களில் இத்திட்டத்தின் கீழ் பல்வேறு தொழிற் சாலைகள் கொண்டு வரப்பட உள்ளது. தொழில் வளர்ச்சியை சுறுசுறுப்புடன் 

மேம்படுத்திடும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த உள்ளது. தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களின் வேண்டு கோளை ஏற்று இப்பகுதியில் மினி டைடில் பார்க் அமைக்க சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளது. 

இப்பகுதி மக்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க தேவையான பல தொழில் திட்டங்கள் துவக்கப்பட உள்ளது என பேசினார். 

இக்கூட்டத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பேசியதாவது: 

தூத்துக்குடி மாவட்டம் விமானம், ரயில், கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து என தொழில் தொடங்க அத்தனை வசதிகளும் உள்ள மாவட்டம் ஆகும். மாவட்டத்திற்கு என பல பெருமைகளும் உள்ளது. இங்கு சிப்காட் வளாகத்தை மேம்படுத்தவும் மற்றும் டைடல் பார்க் அமைக்க நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் தொழில் துறையை அதிக வளர்ச்சி பெற செய்ய 

வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் தூத்துக்குடியில் பல பெரிய தொழிற்சாலைகள் துவக்கவும், சிறிய தொழிற்சாலைகள் (மைக்ரா இன்டஸ்டிரிஸ்) தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட வேண்டும்.  அதிக வேலைவாய்ப்பு உருவாக்கிய மாவட்டமாக தூத்துக்குடியை உருவாக்கிட அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பேசினார்.

இக்கூட்டத்தில் சமூக நலத்துறை குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம்  கொரோனா பாதிக்கப்பட்டு 2 பெற்றோர்களையும் இழந்த 2 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சத்திற்கான காசோலைகளை  தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி வழங்கினார். 

இக்கூட்டத்தில் மகளிர் திட்ட திட்ட இயக்குநர் பிச்சை, தூத்துக்குடி சிப்காட்திட்ட அலுவலர் லியோ வாஸ், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அண்ணாத்துரை, துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.போஸ்கோராஜா, மாநகர தலைமை பொறியாளர் சேர்மக்கனி, தூத்துக்குடி மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.வித்யா மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post