தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் தலையில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிவஞானபுரத்தை சேர்ந்தவர் நாகராஜன் மாற்றுத்திறனாளியான இவர் சிவஞான புரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணி ஆணை வழங்கப்பட்டது பணியில் சேர சென்ற இவரை கடையின் மேற்பார்வையாளர் மாற்றுத்திறனாளி உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று இழிவாகக் கூறி பணி செய்ய விடாமல் கடந்த ஒரு வருட காலமாக தடுத்து உள்ளதாக கூறுகிறார்.
இன்று வரை பணி செய்ய முடியாமல் அவதிப்பட்ட அவர் மாவட்ட மேலாளர், மாவட்ட உதவி மேலாளர் ஆகியோருடன் தபால் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் தகவல் தெரிவித்தும் எந்தவித தீர்வும் எட்டப்படாத நிலையில் இன்று அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தீக்குளிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.
தீக்குளிக்க முயற்சி செய்த அவரை காவல்துறையினர் தண்ணீரை ஊற்றி குளிப்பாட்டினார்கள். காவல்துறையினர் அவரை கைது செய்து சிப்காட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் இவரது தீக்குளிப்பு சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.