தூத்துக்குடியில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடிகள் 5 பேர் கைது - மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை.!


தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அனைத்து உட்கோட்டங்களிலும், அந்தந்த காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 

பல்வேறு தனிப்படைகள் அமைத்து கொலை, கொள்ளை, ரவுடித்தனம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை போன்ற அனைத்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர்  கணேஷ் மேற்பார்வையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  வேல்ராஜ் தலைமையில் முதல் நிலைக் காவலர்கள் பென்சிங்,. மாணிக்கராஜ், சாமுவேல்,  மகாலிங்கம், செந்தில், திருமணி மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் 

நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 1வது ரயில்வே கேட் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் மதன்குமார் (21) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் 

அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. உடனே தனிப்படையினர் அவரை கைது செய்தனர்.

அதே போன்று தனிப்படையினர் இன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்னகரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த சக்திவிநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி சேவியர் மகன் ராபர்ட் விமல்ராஜ் (24), 

முத்தம்மாள்காலனியைச் சேர்ந்த அப்துல்கனி மகன் அப்துல் சமது (24), கந்தசாமிபுரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த ஜோன்ஸ்ராஜ் மகன் தேவராஜன் என்ற சாம் (22) மற்றும் சுந்தரவேல்புரம் அம்பேத்கர்நகரைச் சேர்ந்த மதியழகன் மகன் முத்துச்செல்வன் (20) ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில் 

அவர்கள் அப்பகுதியில் வந்துகொண்டிருந்த ஒருவரிடம் தவறாக பேசி கத்தியைக் காட்டி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. உடனே மேற்படி தனிப்படையினர் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். 

இதுகுறித்து வடபாகம் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள எதிரிகளில் மதன் குமார் மீது வடபாகம் காவல்நிலையத்தில் கூட்டுக்கொள்ளை வழக்கு உட்பட 4 வழக்குகளும், ராபர்ட் விமல்ராஜ் மீது வடபாகம் நிலையயத்தில் கொலைமிரட்டல், கஞ்சா உட்பட 3 வழக்குகளும், அப்துல் சமது மீது தூத்துக்குடி வடபாகம் மற்றும் சிப்காட் ஆகிய காவல் நிலையங்களில் கொலை மிரட்டல் வழக்குகள் உட்பட 3 வழக்குகளும், 

தேவராஜ் என்ற சாம் மீது வடபாகம் நிலையத்தில் கொலைமிரட்டல் உட்பட 3 வழக்குகளும், முத்துச்செல்வன் மீது வடபாகம் மற்றும் தாளமுத்துநகர் ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு உட்பட 2 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்படி எதிரிகளை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  பாராட்டினார்.

Previous Post Next Post