கோவில்பட்டியில் பிரபல ரவுடி குண்டாசில் கைது - மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை.!


கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் உட்பட பல வழக்குகளில் சம்மந்தப்பட்ட பிரபல ரவுடி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட AKS தியேட்டர் ரோடு பகுதியில் கோவில்பட்டி போஸ் நகரை சேர்ந்த மாணிக்கவாசகம் மகன் கணேசன் (எ) குடஞ்சான் கணேசன் (27) மற்றும் அவரது நண்பர்கள் மருது பாண்டி (27) மற்றும் சின்னஜமீன் (30) ஆகியோர் 31.05.2021 அன்று ஒருவரை வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கணேசன் (எ) குடஞ்சான் கணேசனை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 

மேலும் மேற்படி எதிரி  கணேசன் (எ) குடஞ்சான் கணேசன் என்பவர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் உட்பட 19 வழக்குகள் உள்ளது குறிப்படதக்கது.

 இவ்வழக்கின் முக்கிய எதிரியான கணேசன் (எ) குடஞ்சான் கணேசன் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தார். 

மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரக்கு பரிந்துரை செய்தார்.

 அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர். செந்தில் ராஜ் கோவில்பட்டி போஸ் நகரை சேர்ந்த மாணிக்கவாசகம் மகன் கணேசன் (எ) குடஞ்சான் கணேசன் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் சபாபதி அவர்கள் எதிரி கணேசன் (எ) குடஞ்சான் கணேசனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்.

Previous Post Next Post