தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு.!*


தூத்துக்குடி முத்தம்மாள் காலணியில் உள்ள வித்ய பிரகாசம் சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியை புணரமைத்தல் தொடர்பான மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், அலுவலர்களுடன் சென்று இன்று கள ஆய்வு மேற்கொண்டார். 

பழைய கழிப்பறையை அகற்றிவிட்டு மிகவும் பழுதடைந்துள்ளதால் அதை இடித்துவிட்டு கட்டுதல், காம்பவுண்டு உயரப்படுத்தும் வகையில் கிரில் அமைத்தல், வகுப்பறை முழுவதையும் புதுப்பித்தல் மற்றும் சிறப்பு 

குழந்தைகளை பயிற்றுவிக்கும் வகையில் வசதிகளையும், பொருட்களையும் வைத்தல் தொடர்பாக ஆய்வு செய்தார்.

இதற்கான திட்ட மதிப்பிட்டினை உடனடியாக தயார் செய்து அறிக்கை அளிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் ரூ.3 லட்சம் 

மதிப்பில் குப்பைகளை தரம் பிரிக்கும் கூடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் பார்வையிட்டார். 

தூத்துக்குடி மாவட்டம் குமரகிரி ஊராட்சி கூட்டாம்புளியில் தூத்துக்குடி விமான நிலைய சமுக பொறுப்பு நிதி ரூ.80 லட்சம் மதிப்பில் அமைகக் ப்பட்ட குப்பைகளை உரமாக மாறறு; ம் இயந்திரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், பார்வையிட்டார். 

குமாரகிரி, சேர்வகாரன்மடம், கட்டாலங்குளம், முடிவைத்தானேந்தல் ஆகிய 4 ஊராட்சியில் திடக்கழிவுகளை கொண்டு உரம் தயாரிக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. அவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், பார்வையிட்டார். 

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் சரவணன், ஊரக வளர்ச்சி முகமை முதன்மை செயற்பொறியாளர் அமுதாசாக்குலின், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தா, சுரேஷ், வித்ய பிரகாசம் சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளி தலைமை ஆசிரியர் கவிதா மற்றும்  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post