தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் மாநகரில் சீரான குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, செயற்பொறியாளர் சேர்மக்கனி உதவி ஆணையர்கள் சரவணன்,சேகர்,காந்திமதி பிரின்ஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
கூட்டத்திற்கு பின்பு அமைச்சர் கூறியதாவது: தூத்துக்குடி மாநகரப் பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது இதில் அனைத்து பகுதிகளுக்கும் சரியான அளவு குடிநீர் சரியான நேரத்தில் வழங்க வேண்டும்.
சில இடங்களுக்கு குடி நீர் வருவதில் சிரமம் இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள்.குறிப்பாக சத்தியாநகர்,லேபர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் சரியாக கிடைக்கவில்லை என்பது குற்றச்சாட்டு எழுந்துள்ளது
தற்போது பல இடங்களில் வடிகால் வசதிகள் மற்றும் சாலைகள் அமைக்கும் பணி நடைபெறுவதால் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு அத்துடன் கழிவுநீர் கலந்து விட்டதாக கூறப்படுகிறது எனவே இவை அனைத்தையும் சரி செய்து பணிகளை விரைந்து முடித்து மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்க ஏற்பட்டது என்றார்.