தூத்துக்குடியில் கடந்த 3 மாதங்களாக முககவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 60,000 பேரிடம் வழக்குப் பதிவு - மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தகவல்.!

தூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பாக  மாவட்ட காவல்துறைக்கு இரும்பு தடுப்பு (Barricades) வேலிகள்.!


தூத்துக்குடி மில்லர்புரத்தில் இயங்கி வரும் ஸ்பின்னிங் மில் சார்பாக பி.எஸ்.எஸ் ஜெயம் அன் கோ இயக்குனர் ஸ்டான்லி சாம்ராஜ் தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு 20 இரும்பு தடுப்பு வேலிகளை (Barricades) தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் முன்னிலையில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமாரிடம் வழங்கினர்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறுகையில், தூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு 20 இரும்புத் தடுப்பு வேலிகள் கொடுத்துள்ளதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக நன்றியை தெரிவித்தார். 

தற்போது கொரோனா தொற்று இரண்டாம் அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த காலகட்டத்தில்  அனைத்து காவல் துறையினரும் முன்கள பணியாளராக தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த மூன்று மாதங்களாக முககவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 1,26,00,000/- பணம் அபராதமாக வசூக்கப்பட்டுள்ளது, அதே போன்று கொரோனா ஊரடங்கின் போது தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிந்தவர்களிடம் இருந்து 11,700 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வாகனங்கள் படிப்படியாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார்.

நிகழ்வின்போது தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர்  ஆனந்தராஜன், தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில் சுரேஷ், உதவி ஆய்வாளர்  வெங்கடேஷ் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் மாரிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Previous Post Next Post