தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 25 கோடி மதிப்பீட்டில் படகு அணையும் சுவர் பணி - கனிமொழி எம்.பி,அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்..!


தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 25 கோடி மதிப்பீட்டில் கூடுதல் படகு அணையும் சுவர் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது 

நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன்,மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.



நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும்,திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி கருணாநிதி எம்பி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை மண்டல இணை இயக்குநர அமல்சேவியர், மீன்வளத்துறை, மீன்பிடி துறைமுக திட்டக் கோட்ட செயற்பொறியாளர் கங்காதரன், மீன்வளத்துறை உதவி இயக்குநர் விஜயராகவன், மீன்வளத்துறை மீன்பிடி துறைமுக மேலாண்மை பிரிவு உதவி இயக்குநர் அன்றோ , 

முன்னாள் சடட் மன்ற உறுப்பினர் டேவிட் செல்வின், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி,மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வக்குமார்,  ஒருங்கிணைந்த அனைத்து விசைப்படகு உரிமையாளாகள் கூட்டமைப்பினர் அனைத்து விசைப்படகு தொழிலாளர்கள் நல சங்கத்தினர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post