திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

 திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் ஒரே நாளில் நடைபெற்ற மூன்று தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.



 கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீர்க்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் தேர்த் திருவிழா பிப். 21ஆம் தேதி கொடியேற்றறத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி திருவீதி உலா நடைபெற்றன.விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதிகாலையில் விநாயகர், திருமுருகநாதர், வள்ளி, தெய்வானை, பார்வதி, சண்டிகேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் திருத்தேருக்கு

எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. கரோனா விதிமுறைகளுக்கு உள்பட்ட மாலை 3 மணி அளவில் திருமுருகநாதர் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு தேரோட்டமும் நடைபெற்றது. இதையடுத்து, சண்முகநாதர் திருத்தேர், அம்மன் திருத்தேர் தேரோட்டம் ஆகிய மூன்று தேர்களும் ஒரே நாளில் தேரோட்டம் நடைபெற்றது.  திருத்தேர் ரத வீதிகள் வழியாகச் சென்று நிலையை அடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆரோகரா கோஷம் முழங்க திருத்தேரை வடம்பிடித்து இழத்தனர். திருப்பூர் சிவனடியார்கள் திருக்கூட்டத்தாரின் கைலாய வாத்தியத்துடன் தேரோட்டம் நடைபெற்றது. திருமுருகன்பூண்டி போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில்,  மின்விளக்குகள் பொருத்தி, குடிநீர் வசதியுடன், தூய்மைப் பணி மேற்கொண்டனர். திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு மீண்டும் தேரோட்டம் நடைபெறவுள்ளது. 28ஆம் தேதி பரிவேட்டை, குதிரை வாகனம், சிம்ம வாகனக் காட்சிகள், தெப்பத்தேர் உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மார்ச் 1ஆம் தேதி இரவு ஸ்ரீசுந்தரர் வேடுபறி திருவிழா நடைபெறுகிறது. 2ஆம் தேதி பிரம்மதாண்டவ தரிசனக் காட்சி, 3ஆம் தேதி மஞ்சள் நீராடுதல், இரவில் மயில் வாகனக் காட்சியுடன் தேர்த் திருவிழா நிறைவுபெறுகிறது.


Previous Post Next Post