சட்டவிரோதமாக ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் லோகோவை பயன்படுத்தி முககவசங்கள் தயாரித மூன்று நபர்கள் கைது


திருப்பூர் மாநகரத்தில் செயல்பட்டு வரும் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தினர் மூன்றடுக்கு
பாதுகாப்பு கொண்ட முககவசங்களை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.


இந்த முககவசத்தில் ராம்ராஜ் நிறுவனத்தின் டிரெட் மார்க்கான RR என்ற லோகோ
பொறிக்கப்பட்டுள்ளது. மேற்படி நிறுவனத்தின் லோகோவை சட்டவிரோதமாக பயன்படுத்தி போலியாக முககவசங்கள் தயார் செய்து அதனை திருப்பூர் சந்தை என்ற இனையதள முகவரியில் விற்பனைக்கு உள்ளதாக தெரிவித்து விளம்பரம் செய்திருந்தார்கள்.


இந்த சம்பவம் தொடர்பாக ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தினர் கடந்த 8.10.2020 அன்று அளித்த புகாரின் பேரில் திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. போலியாக முககவசங்களை தயார் செய்து விற்பனை செய்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க திருப்பூர் மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் இ.கா.ப உத்தரவின்படி காவல் துணை ஆணையர் K..சுரேஷ்குமார், கண்காணிப்பில், காவல் உதவி ஆணையர் பாலமுருகன், மேற்பார்வையில் ஆய்வாளர் கந்தசாமி, உதவி ஆய்வாளர்கள் வெங்கடாசலம், குணசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.


தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு போலியான முககவசங்களை
இணையதள முகவரியில் விளம்பரம் செய்த விற்பனை செய்த கொங்கு மெயின் ரோடு, திருநீலகண்டபுரம் பகுதியை சேர்ந்த சீனு (வயது 30), போலியாக முககவசங்களை தயார் செய்த கே.வி.ஆர். நகர் மேற்கு பகுதியை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் நேர்மைநாதன் (வயது 32),  ராம்ராஜ் நிறுவனத்தின் லோகோவை போலியாக பிரிண்ட் செய்த பிரிண்டிங் உரிமையாளர் 3.முருகன் (வயது 32)  ஆகியோரை கைது செய்து
அவர்களிடமிருந்து ராம்ராஜ் நிறுவனத்தின் லோகோவை போலியாக பயன்படுத்தி தயார்
செய்துவைத்திருந்த 437 முக கவசங்கள், 1532 லோகோ ஸ்டிக்கர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


விரைவாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை ஆய்வாளர் கந்தசாமி, உதவி ஆய்வாளர்கள் வெங்கடாசலம், குணசேகரன் தலைமை காவலர்கள், கௌரிநாதன், ஆனந்தன், வினோஆனந்தன், முதல் நிலை காவலர்கள் குமார், யாசர்அராபத் கருணாசாகர், பாலகிருஷ்ணன் ஆகியோரை கொண்ட
தனிப்படையினரின் பணியை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் இ.கா.ப., பாராட்டினார். அப்போது காவல் துணை ஆணையர் (சட்டம் & ஒழுங்கு,
குற்றம், போக்குவரத்து) காவல் உதவி ஆணையர், மத்திய குற்றப்பிரிவு ஆகியோர் உடனிருந்தனர்


Previous Post Next Post