ஜோலார்பேட்டை ஊட்டச்சத்து மாத நிறைவு விழாவில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் கே சி வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோர் பங்கேற்பு
ஒரு குழந்தை கருவாகி உருவான நாளிலிருந்து முதல் இரண்டு வருடங்களான ஆயிரம் நாட்களுக்கு அந்த குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு பாதுகாப்பு அளிக்க ஏற்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் மற்றும் தேசிய ஊட்டச்சத்து குழுமம் இணைந்து பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து வருகிறது.
இந்த திட்டத்தில் ஒருங்கிணைந்து செயல்படும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவில் உள்ள நபர்களை ஊக்கப்படுத்த ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்று வருகிறது.
தொடர்ச்சியாக திருப்பத்தூர் மாவட்டம் சோலையார் பேட்டையில் உள்ள ஒரு தனியார் திருமண வளாகத்தில், 2020ம் ஆண்டிற்கான தேசிய ஊட்டச்சத்து மாத நிறைவு விழாவில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவனருள் தலைமையில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே சி வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அமைச்சர் கே சி வீரமணி பேசுகையில் பெற்றெடுக்கும் குழந்தையின் வளர்ச்சி முதல் கொண்டு ஒரு பெண் திருமணமாகி கணவர் வீட்டுக்கு செல்லும் வரை பெண்களின் கல்வி ஆரோக்கியம் தொழில் என்று பெண்களுக்கான எல்லா நண்மைகளையும் செய்த அம்மாவின் திட்டங்களுக்கு உறுதுணையாக இருந்த தேசிய ஊட்டச்சத்து திட்ட அலுவலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் அணைவரையும் பாராட்டுகிறேன். ஏழு வருடங்களுக்கு முன்பு 100க்கு 18என்று இருந்த குழந்தை இறப்பு விகிதத்தை தற்பொழுது 9 ஆக குறைந்துள்ளது. ஆக்கப்பூர்வமான திட்டங்களை சரியாக கொண்டு போய் மக்களிடம் சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்திய பத்திரிகை யாளர்களுக்கும் நண்றி என கூறினார்.
தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட அங்கன்வாடி பணியாளர்களுக்கும் பல்வேறு போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற்ற மகளிர் சுய உதவி குழுக்களை சார்ந்த பெண்களுக்கும் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் மருத்துவர் சுரேஷ், வானியம்பாடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ வி சம்பத் குமார், மாவட்ட கூட்டுறவு அச்சகதலைவர் டி டி குமார், திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ராஜேந்திரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் வெங்கடேசன், சோலையார் பேட்டை முன்னால் நகர மண்ற தலைவர் சீனிவாசன், முன்னால் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரமேஷ், ஆம்பூர் சர்க்கரை ஆலை தலைவர் மதியழகன், மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கோமதி, சோலையார் பேட்டை குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சக்தி சுபாஷினி, சிவாஜி, மணிகண்டன், செந்தில் குமார், டிடி சங்கர், சாம்ராஜ், மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மகளிர் சுய உதவி குழுக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Tags:
மாவட்ட செய்திகள்