திருப்பத்தூர் மாவட்டம், பெரிய குணிச்சி பகுதியை சேர்ந்த தசரதன் மகன் கோவிந்தராஜ் (29) என்பவருக்கும் ஜோலார்பேட்டை இடையம்பட்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகள் கோமதி (28) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு சீர் வரிசையாக ஒரு பல்சர் பைக், 10 சவரன் நகை அளித்துள்ளனர்.
இரண்டு வருடம் மட்டுமே ஒழுங்காக குடும்பம் நடத்தியுள்ளனர். இருவருக்கும் அழகான ஆண் குழந்தை ஒன்று உள்ள நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டாக கோமதியிடம் கோவிந்தராஜ் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளான். நினைத்துக் கொண்டால் அடி அடி என்று அடியை வாங்கியே வாழ்க்கை நடத்தியுள்ளார் கோமதி. ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ் கோமதியின் காதில் மீது பலமாக தாக்கியுள்ளார்.
இதனால் கோமதியின் காது ஜவ்வு கிழிந்து காது கேளாமல் போயுள்ளது. அப்போது அம்மா வீட்டிற்கு சென்ற கோமதி ஆறுமாதம் ஆகிய நிலையில் காதிற்கு மெஷின் வைத்து வாழ்ந்து வந்துள்ளார். கோவிந்தராஜ் அம்மா வீட்டுக்கு சென்ற மனைவியைக் கண்டுகொள்ளாமல் மாமியார் வீட்டில் சீதனமாக கொடுத்த நகைகளை வைத்து திருமணம் ஆகாதவன் போல் வளம் வந்துள்ளார்.
கோவிந்தராஜ் தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் செய்யும் தொழில் செய்து வந்த நிலையில் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த சுபாஷினி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் ஒரு மனைவியை வைத்து வாழ முடியாமல் அம்மா வீட்டிற்கு அடித்துத் துரத்திய நிலையில் காதல் மயக்கத்தில் இடம் பெண்ணை கரம் பிடித்து உள்ளார் கோவிந்தராஜ். இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில் அந்தப் புகைப்படத்தை தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இல் வைத்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கோமதி உடனடியாக அவரது உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் அவரது உறவினர்கள் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புகார் அளித்துள்ளனர். புகாரை பெற மறுத்ததால் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் இடம் இது குறித்து தகவல் அளித்துள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சென்றதால் அவசர அவசரமாக புகாரை பெற்றுக் கொண்டுள்ளனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று விட்டார்களே என்ற ஆத்திரத்தில் கோமதி கொடுத்த புகார் மனு பெற்றுக்கொண்டு உனது கணவரை நீங்கள் பார்த்தால் சொல்லுங்கள் நாங்களும் தேடுகிறோம் என்று கூறி வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர். மாதக்கணக்கில் ஆகியும் கோவிந்தராஜ் போலீசார் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது உறவினர்கள் போலீசாரிடம் கேட்டபோது அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கோமதியின் உறவினர்கள் காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேலு விடம் முறையிட்டுள்ளனர். காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேலு மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் இது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுங்கள் ஏன் இன்னும் பிடிக்கவில்லை என்று சத்தம் போடவே சத்தமில்லாமல் வந்து சேர்ந்துள்ளார் கோவிந்தராஜ். அவனைப் பிடித்த பிறகும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் சமரசம் பேசி கொள்ளுங்கள் என்று சாதாரணமாக கூறியுள்ளனர் போலீசார். இரண்டு வயது பிஞ்சு குழந்தை கையில் வைத்துக்கொண்டு நடுத்தெருவில் நிற்கிறார் கோமதி.
ஏற்கனவே திருமணம் ஆகி இருந்த நிலையில் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறி இன்னொரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்திருந்த நிலையிலும் அனைத்து மகளிர் காவல் துறையினர் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். காது கேளாமல் இரண்டு வயது பிள்ளையை வைத்துக் கொண்டு பொன்னையும் பொருளையும் இழந்த கோமதிக்கு திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை,
Tags:
மாவட்ட செய்திகள்