கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் செளந்திரசோழபுரம் ஊராட்சிக்குட்பட்ட செம்பேரி கிராமத்தில் நேற்று இரவு பெய்த கன மழையால் மழை நீர் தேங்கி நின்றது இதனால் நெல் பயிர் நடும் விவசாயிகள் பெரும் அவதியடைந்தனர்.
வடிகால் வாய்க்கால் இல்லாமல் மழை நீர் தேங்கி நிற்பதால் பயிர்கள் நாசம் ஆனதால் விவசாயிகள் போராட்டத்திற்கு தயாரானார்கள்.
தகவலறிந்து வந்த பெண்ணாடம் காவல்துறை ஆய்வாளர் மற்றும் தனிப் பிரிவு எஸ்பி சிஐடி செல்வகுமார் மற்றும் கிராமநிர்வாக அலுவலர்வருவாய் அலுவலர்ஊராட்சி மன்ற தலைவர் நடேசன்ஊராட்சி மன்ற துணைத்தலைவர் துர்க்காதேவி ஆறுமுகம்நல்லூர் சேர்மன் செல்வி ஆடியபதம்ஆகியோர் வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஓரு வாரத்திற்குள் வடிகால் வாய்க்கால் அமைத்து தருவதாக உறுதியளித்தனர்
இதனை ஏற்ற பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
Tags:
மாவட்ட செய்திகள்