பழனி மயில் ரவுண்டானா அருகே நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் அமைப்பு சார்பாக உ.பி.யில் ஹத்ராஸ் என்ற இளம்பெண் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு படுகொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக அடையாளம் கண்டு அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை தொடர்ந்து வருகின்றது. எனவே உத்தரப்பிரதேச முதல்வர் யோகி அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியாவில் பெண்களின் வளர்ச்சி தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில் ஒவ்வொரு மாநிலங்களிலும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாமல் தொடர்ந்து நாள்தோறும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. மேலும் மத்தியில் ஆளும் பாஜக அரசு பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை சற்றும் பொருட்படுத்தாமல் ஆட்சியாளருக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் உ.பி.யில் நடைபெற்ற சம்பவம் அனைத்து மக்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி வரும் நிலையில் உ.பி. முதல்வர் யோகி உடனடியாக பதவி விலக வேண்டும் மத்திய அரசு உடனடியாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெண்களுக்கு என்று தனி சட்டம் இயற்றி பெண் இனத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் பல்வேறு சட்டங்களை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் தலைமையாக ரஜப்நிஷா ஆலிமா மற்றும் வரவேற்புரை தஸ்லிமா ஆர்ப்பாட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் பவுஜுர் ரஹ்மான் ஆகியோர் பெண்களின் பாதுகாப்பு என்ற பெயரில் பல்வேறு கருத்துகளை எடுத்துக் கூறினர். மேலும் இந்நிகழ்வில் எஸ்டிபிஐ பி.எஃப்,ஜ, ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் பெண்கள் சமூக ஆர்வலர்கள் அனைவரும் குடும்பங்களுடன் கலந்து கொண்டு கைகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு கோஷங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
Tags:
மாவட்ட செய்திகள்