வெளியூர்களில் இருந்து இராமேஸ்வரம் பகுதிக்குள் முகக்கவசம் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் அபராதம் விதித்து எச்சரிக்கை செய்தி அனுப்பினார்.
நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக பல்வேறு கட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பொதுமுடக்கத்தில் பல்வேறு கட்ட தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் இராமேஸ்வரம் கோவிலுக்கு வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் மற்றும் அனைத்து வாகனங்களில் வரும் பயணிகள் முகக்கவசம் அணிந்து வருகிறார்களா என்று வாகனங்களை நிறுத்தி சுகாதாரத்துறை ஆய்வாளர் பாலா சுப்புரமணியம் தலைமையில் பாம்பன், தங்கச்சி மடம் ஆய்வாளர்கள் சோதனை நடத்தினர், அப்போது முகக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் அபராதம் விதித்தும் அவர்களை எச்சரிக்கை செய்தும் அனுப்பினர்.
Tags:
மாவட்ட செய்திகள்