வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் இந்திய ரெட்கிராஸ் சொசைட்டியின் அலுவல் குழுக் கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு சேர்மன் த.முத்தரசன் தலைமை தாங்கினார். செயலாளர் பொன்.வள்ளுவன் கீழ் காணும் தீர்மானங்களை முன் வைத்தார்.
இந்திய ரெட்கிராஸ் சொசைட்டி பேர்ணாப்பட்டு வட்டக் கிளை அறிமுக விழா கூட்டம் நடத்துவது. பேர்ணாம்பட்டு வட்டத்தில் 10 அரசு துவக்கப் பள்ளிகளை அந்த பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழு உடன் இணைந்து மாதிரி பள்ளிகளாக மாற்றுவது.
பேர்ணாம்பட்டு வட்ட எல்லைக்கு உட்பட்ட நடுநிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி வேலூர் மாவட்ட கிளையுடன் இணைந்து வட்ட அளவிலான ஜூனியர் ரெட்கிராஸ் பயிற்சி முகாம் நடத்துதல்.
விழா நடத்துவது தொடர்பாக மாவட்ட செயலாளரின் டாக்டர்.சி.இந்திரநாத் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை நடுதல். மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்துதல். பேர்ணாம்பட்டு ஏரியை தூய்மைப்படுத்தி மழைநீர் ஆதார மையமாக உறுவாக்குதல்.
ரசாயன கழிவுகளை அகற்றி பேர்ணாம்பட்டு ஏரியில் மூலிகை மரங்களை நட்டு பாதுகாக்கும் பணி மேற்கொள்ளல். ஏரியை தூய்மைப்படுத்தி பாதுகாத்தல் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் குடியாத்தம் கோட்டாட்சியர் ஆகியோரை தொடர்ந்து சந்தித்தல்.
நீர் வரத்து கால்வாய்களை தூர்வாருதல் குறித்து உரிய அலுவலர்களை சந்தித்தல்.
பேர்ணாம்பட்டு வட்டத்திற்கு கிராம காவல் நிலையம்,நகர காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் தேவைகள் குறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரை சந்தித்து கருத்துக்கள் வழங்குதல்.
வாகன ஆய்வாளர் அலுவலகம் வேண்டுதல் குறித்து கருத்துருக்கள் அனுப்புதல்.
மேற்காணும் தீர்மானங்கள் குறித்து பேசி, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் துணைச் சேர்மன் கோ.ரவி, அலுவல் குழு உறுப்பினர்கள் முகமது அலி,ஜகூர் அஹ்மத்,ஜெய்கர், பிரேம் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Tags:
மாவட்ட செய்திகள்