கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நல்லூர் , திட்டக்குடி வெலிங்டன் ஏரி,மங்களூர், தொண்டாங்குறிச்சி ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி ஆய்வு மேற்கொண்டார்.
வடகிழக்கு பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் ஏற்படும் சேதங்களை சரிசெய்ய வைக்கப்பட்டுள்ள மரம் அறுக்கும் எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகள் கொசு மருந்து தெளிப்பான்கள் மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு தேவையான பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் விருத்தாச்சலம் வாக்கு என்னும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரசு சேமிப்பு கிடங்கில் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஆணைக்கினங்க மூன்று மாதத்திற்கு ஒருமுறை வாக்கு பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிடங்கில் பாத்துகாப்பு மற்றும் உறுதி தன்மை குறித்து அங்கீகரிக்கப்பட்ட மத்திய மாநில அரசியல் கட்சியின் பிரதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கிடங்கில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மின்னிணைப்பு, தீயணைப்பு சாதனங்கள் மற்றும் சேமிப்பு கிடங்கின் ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தற்போது இக்கிடங்கில்
பைலட் யூனிட் 1276,
கண்ட்ரோல் யூனிட்.84 மற்றும்
வி வி.பேடு 55 ம் இருப்பில் உள்ளதாக தெரிவித்தார்.
இதில் கூடுதல் ஆட்சியர் ராஜகோபாலசுந்தரா, சார் ஆட்சியர் பிரவீண்குமார், வட்டாட்சியர் சிவகுமார், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பாண்டு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமாரி. சுந்தரம் தேர்தல் துணை வட்டாட்சியர் அன்புராஜ், மண்டலா துணைவட்டாட்சியர் வேல்முருகன், காவல் துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன்
வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், கிராம நிர்வாக அலுவலகர் ராமச்சந்திரன் திட்டக்குடி வட்டாட்சியர் செந்தில்வேல்,ரவிச்சந்திரன்,காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன், காவல் ஆய்வாளர் கவிதா,வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.ஆர் சங்கர்,தண்டபாணி, பொதுபணி துறை செயற்பொறியாளர் மணிமோகன்,துணை பொறியாளர் கோவிந்தராஜ்,சோழராஜன்,பாஸ்கர் ,ஊராட்சிமன்றதலைவர் பச்சையப்பன் துணை தலைவர் செல்வி நீலகண்டன் ,வார்டு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.