ராமநாதபுரம் அருகே தனியாக இருந்த பெண்ணை நகையை பறித்துக்கொண்டு கத்தியால் கழுத்தில் குத்தி கொலை பரபரப்பு
ராமநாதபுரம் அடுத்துள்ளது இரட்டை ஊரணி கிராமம் இந்த கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொது மக்கள் வாழ்ந்து வருகின்றனர் இப்பகுதியில் அதிகமாக பனைத் தொழிலாளர்கள் உள்ள கிராம பகுதியாகும் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ் இவரின் மனைவி விஜயராணி கணவர் உயிரிழந்த நிலையில் 52 வயதுள்ள விஜயராணி தனியாக வசித்து வந்தார்.
இரண்டு மகள்கள், ஒரு மகன் இருந்த நிலையில் மகள் கள் அருகே உள்ள கிராமத்தில் தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வந்தனர் மகன் அந்தமானில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் இவரின் கணவர் உயிரிழந்த நிலையில் தனியாக வசித்து வந்தார் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த விஜய ராணியை மர்ம நபர்கள் கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்கள் யார் என்று தெரியாமல் கிராமத்தினர் பரபரப்புக்கு உள்ளானார்கள்
இதுதொடர்பாக இரட்டை ஊரணி கிராமத்தைச் சார்ந்த ஊர் தலைவர் காவல்துறைக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர் இதுதொடர்பாக தகவல் அறிந்த ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் மற்றும் தடய அறிவியல் துறை துணை கண்காணிப்பாளர் யூசுப் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
அப்போது மோப்பநாய் வரவழைக்கப்பட்டு அந்த பகுதி முழுவதும் துருவித் துருவி விசாரணை நடத்தினர் கொலை தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் கூறுகையில் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது தொடர்பு உள்ளதா என்பது பற்றி காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது விரைவில் குற்றவாளி கைது செய்யப்பட்டு புலன் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தார்
கொலை செய்யப்பட்ட விஜயராணி வீட்டின் அருகே வாடகைக்கு வசித்து வந்த சாயல்குடி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஐஸ் விற்கும் தொழில் செய்து வந்துள்ளார் இதில் பழக்கம் இருந்துள்ளது சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு விஜய ராணியிடம் ஊருக்கு செல்ல பணம் கேட்டுள்ளார் இந்த சம்பவம் தொடர்பாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறை விசாரித்து வருகிறது
Tags:
மாவட்ட செய்திகள்