ராதாபுரம் தொகுதி முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ராதாபுரம் தொகுதியில் முதல்கட்டமாக வள்ளியூர் ஒன்றியம் அடங்கார்குளம், அச்சம்பாடு ஊராட்சிகள் மற்றும் ராதாபுரம் ஒன்றியத்திலுள்ள க.உவரி, ஆனைகுடி,உறுமன்குளம்.கும்பிகுளம் ஆகிய ஊராட்சிகளிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் ரூ.4.41கோடி மதிப்பீட்டில் ஜல்ஜீவன் மிஷன் திட்டம் மூலம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.
இந்நிலையில் ராதாபுரம் தொகுதி உறுமன்குளம் ஊராட்சி பெட்டைகுளத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 1400 மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டப் பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐ எஸ் இன்பதுரை கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி குடிநீர் இணைப்பு வழங்கும் திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து வள்ளியூர் ஒன்றியம் அச்சம்பாடு ஊராட்சி பகுதிகளில் இத் திட்டத்தின் மூலம் அமைக்கபட உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிகளை இன்பதுரை எம்.எல்.ஏ துவக்கிவைத்தார்.
இந் நிகழ்ச்சிகளில் வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மணி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஶ்ரீகாந்த், ராதாபுரம் அதிமுக ஒன்றிய செயலாளரும், வீட்டு வசதி வாரிய துணைத் தலைவருமான அந்தோணி அமலராஜா, வள்ளியூர் ஒன்றிய கழக செயலாளர் அழகானந்தம், வள்ளியூர் யூனியன் முன்னாள் துணைச் சேர்மன் பொன் செல்வன்,திசையன்விளை பேரூராட்சி மன்ற முன்னாள் துணை தலைவர் செல்வராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரெஜினாள் மேரி முன்னாள் அச்சம்பாடு ஊராட்சி மன்ற தலைவர் விண்ணரசு, முன்னாள் ஊராட்சி கழகச் செயலாளர் ஜெயராஜ், ஆனைகுளம் முன்னாள் ஊராட்சி கழகச் செயலாளர் ராபின், பண்டாரகுளம் கூட்டுறவு சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன், அணைக்கரை தனம், வள்ளியூர் நகர துணைச் செயலாளர் கல்யாணசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:
மாவட்ட செய்திகள்