பல்லாவரத்தில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி





 

சென்னை  பல்லாவரத்தில் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் 82.66 கோடி செலவில் சுமார் 1.53 கிலோ மீட்டர் நீளமுள்ள புதிய மேம்பாலம் கட்டப்பட்டது.

 

நீண்டநாள் மக்கள் கோரிக்கையை ஏற்று தற்போது இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டு  இந்த பாலத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

 

இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கொடியசைத்து வாகனங்கள் மேம்பாலத்தில் சென்றது.

[17/09, 12:54 pm] Basha: பல்லாவரம் வண்டலூர் மேம்பாலத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் திறந்து வைத்தார் சென்னை புறநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண பல தடைகளைக் கடந்து மேம்பாலம் திறக்கப்பட்டது

 

சென்னை புறநகர் பகுதியான பல்லாவரம் மிக முக்கியமான ஒரு பகுதியாகும் அங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும் வாகனங்கள் ஆமை வேகத்தில் செல்லும் அவசர சிகிச்சை கூட செல்ல முடியாத சூழ்நிலையில் நிறைய உயிரிழப்புகள் அரங்கேறியது

 

முக்கிய பண்டிகையான தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகளில் அதிக கூட்ட நெரிசலால் வாகனங்கள் செல்லமுடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்

 

 இந்த நிலையில் ஜிஎஸ்டி சாலையில் பல்லாவரம் பகுதியில் குன்றத்தூர் செல்லும் சாலை சந்திப்பு பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது 

 

பின்னர் இத்திட்டம் 2016ஆம் ஆண்டு  82.66 கோடி செலவில் பல்லாவரம் மேம்பாலம் அமைக்கும் தொடங்கியது

 

 இதன்படி பல இன்னல்களை கடந்து தற்போது 1.53 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த மேம்பால பணிகள் முடிந்து தற்பொழுது முதலமைச்சரால் திறக்கப்பட்டுள்ளது

 

இந்த பாலம் ரேடியல் சாலை கடந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் சென்னை விமான நிலையம் வரை செல்கின்றது 

 

மூன்று வழிகள் கொண்ட மேம்பாலமானது  திறக்கப்பட்டதால் தாம்பரத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் எளிதாக கடந்து செல்ல முடியும் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்க வேண்டியதில்லை

 

அதுமட்டுமின்றி தாம்பரம் அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அருகே கூடுவாஞ்சேரி மற்றும் கேளம்பாக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது அதை சரிசெய்ய அங்கேயும் ஒரு மேம்பாலம் 55 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பால பணிகள் செயல்படுத்தப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது அதையும் தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார்

 

 இந்த இரண்டு மேம்பாலங்களும் திறக்கப்பட்டதால் சென்னை புறநகர் பகுதி மக்களுக்கு  மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது


 

 




Previous Post Next Post