பேர்ணாம்பட்டு அருகே காட்டாற்று தடுப்பணையில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டம்,பேர்ணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜானகிராமன் மகள் கீர்த்தனா (வயது 8.) 3 வகுப்பும்,முரளி மகள் பாவனா (வயது.12) 7 ம் வகுப்பும் எருக்கம்பட்டு பள்ளிக்கூடத்தில் பயின்று வருகின்றார்கள்.
வியாழக்கிழமை அன்று தன்னுடைய தோழிகளுடன் எருக்கம்பட்டில் இருக்கும் காட்டாற்று தடுப்பணையில் இறங்கி விளையாடி கொண்டிருந்தபோது காட்டாற்று வெள்ளம் வேகமாக வந்ததால் இருவரும் நீரில் அடித்து செல்லப்பட்டு மூழ்கியிருக்கிறார்கள்.
உடனடியாக மாணவிகள் அங்கிருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக நீரில் குதித்து அங்கிருந்த சிலர் இருவரையும் மீட்டனர். உடனடியாக பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கீர்த்தனா உயிரிழந்தார்.
மேலும் பாவனா மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இது குறித்து பேர்ணாம்பட்டு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டுவருகிறார்கள்.
Tags:
மாவட்ட செய்திகள்