நம்பியூர் பகுதியில் ரூ.2கோடியே 40இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் -அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்தார்


 

ஈரோடு மாவட்டம்  கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் பகுதியில் ரூ.2கோடியே 40இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தமிழக பள்ளிகல்விதுறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

 

இதில் முன்னதாக கல்லாகாட்டுபாளையதில் ரூ 90இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலை மற்றும் பழனிகவுண்டர் வீதி முதல் கொன்னமடையில் 20 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய தார் சாலை ஈஸ்வரன் கோவில் செல்லும் புதிய சாலையில் 80 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தார்சாலைகளை அமைச்சர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

 

அதைதொடர்ந்து வி.ஐ. பி.நகரில் 50இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள தார் சாலைக்கு பூமிபூஜை என ரூ.2கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்தார் அதைதொடர்ந்து  நம்பியூர் ஊரட்சி அலுவலகத்தில் சத்துணவு மையங்களுக்கு தேவையான சமையல் உபகரணங்களை தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் கூறியது ...

 

சிறப்பாசிாியா்களுக்கு  பணி வழங்கும் போதே   தற்காலிக ஆசிாியா்கள் என்று மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. அவா்களுக்கு நிரந்தரப்பணி வாய்ப்பு இல்லை... 

 

நீட் தேர்வில் 196 கேள்விகளுக்கு 180 வினாக்கள் கேட்கப்பற்றிந்தது போல மத்திய அரசு கொண்டு வரும் எந்த தேர்வானாலும் அதனை எதிர்கொளம் அளவிற்கு புதிய பாட திட்டம் அமைந்துள்ளது.

 

கொரோனா காலத்திற்கு பிறகு விளையாட்டுத்துறையில்   பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்படும்.

 

தொலைக்காட்சி மூலம் நடத்தப்படும் மாணவா்களின் தரம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படும் நீட் தோ்வில் 90 சதவிகிதம் கேள்விக் நமது பாடத்திட்டதின் மூலம் தான் கேட்கப்ட்டுள்ளது. எத்தனை போட்டித்தோ்வு வந்தாலும் அதை எதிா்கொ்ளும் வகையல் பாடத்திட்டங்களை உருவாக்குவோம். கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவா்களின் சந்தேங்ளை  தீா்க்க சனிக்கிழமைகளில் 6 மணி நேரம் ஔிபரப்பு செய்யப்படும்  அப்போது மாணவா்கள் சந்தேகங்கள் தீா்கப்படும்..

 

பாடத்திட்டம் குறைப்பு குறித்து  ஒருமாதத்திற்கு முன்பே குழு அறிக்கை சமா்பித்தது அதன் அடிப்படையில் 40 சதவிகிம் குறைப்ட்டுள்ளது. கொரோனா வைரஸ் குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும்.

 

என அமைச்சா் தொிவித்துள்ளாா்.நிகழ்ச்சியில்கோட்டாட்சியர் ஜெயராமன்.ஆவின் தலைவர் காளியப்பன்,தாசில்தார் வெங்கடேஸ்வரன், ஒன்றிய  செயலாளர் தம்பி என்கிற சுப்ரமணியம்,மாவட்ட கவுன்சிலர் கௌசல்யாதேவி ஈஸ்வரமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ.கந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாவேசு, யூனியன் சேர்மன் சுப்பிரமணியம்,பேரூர் கழக செயலாளர்கள் கருப்பண கவுண்டர். சேரன் சரவணன்,அருண் மஹால் பிரபு, எம்.எம்.எம்.செல்வம், டெலிபோன் செல்வம்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post