திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்திடும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் (COVID-19) நோய் தொற்று குறித்து அறிய அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் பரிசோதனை செய்து கொள்ள விரும்பும் பொதுமக்களிடமிருந்து மாதிரிகள் சேகரித்து பரிசோதனைகளை அதிகரிக்க சுகாதார துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் இத்தருணத்தில் இந்நோய்ப் பரவலின் தீவிரத்தை உணர்ந்து மக்கள் அதிக தூரம் பயணிப்பதை தவிர்த்து பொதுமக்கள் தாங்கள் வசிக்குமிடங்களுக்கு அருகாமையிலேயே சோதனைகள் செய்து கொள்ளும் பொருட்டு பொதுமக்களிடமிருந்து மாதிரிகளை சேகரிக்க திருப்பூர் மாவட்டத்தில் கீழ்க்காணும் இடங்களில் மாதிரி சேகரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவை தவிர, திருப்பூர் மாநகராட்சியில் ஒரு நடமாடும் மாதிரி சேகரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது.
மேலும் ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஒவ்வொரு வட்டாரத்திலும் தினசரி நடைபெறும் காய்ச்சல் முகாம்களிலும் அறிகுறி உள்ளவர்களுக்கு மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. எனவே பொதுமக்கள் சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகளில் எவையேனும் இருப்பின் தங்களது குடியிருப்பிற்கு அருகாமையில் உள்ள இம்மையங்களிலோ அல்லது தங்களது பகுதிகளில் நடத்தப்படும் காய்ச்சல் முகாம்களில் பங்கேற்றோ தங்களை சோதனை செய்து கொண்டு, நோய்த்தொற்றிலிருந்து தங்களையும் தங்களது குடும்பத்தையும் காத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன்., அறிவுறுத்தியுள்ளார்.