கோவை வனக்கோட்டத்தில் கடந்த ஜனவரி முதல் இதுவரை 19 யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழப்பு 


கோவை வனக்கோட்டத்தில் கடந்த ஜனவரி முதல் இதுவரை 19 யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளது. மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்டும்,யானைகளுக்கு இடையே நடைபெற்ற சண்டையில்  10க்கும் யானைகள் உயிரிழந்தது. இந்த யானைகள் குறித்து ஆரம்ப கட்டத்தில் கண்டரிய முடியாததால் அதன் உயிரிழப்பை தடுக்க முடியவில்லை,



இதனை தொடர்ந்து காயம்பட்ட யானைகள், சண்டையில் காயமடைந்த யானைகளை கண்டறிய கோவை வனக் கோட்டத்தில்  அடர்ந்த வனப்பகுதிகளில் யானைகள் மற்றும் வன விலங்குகளை ட்ரோன் மூலமாக கண்காணிக்கும் பணியானது  நடைபெற்று வருகிறது. குறிப்பாக சிறுமுகை வனப் பகுதிகளில் யானைகளின் உயிரிழப்பு  அதிகரித்து வரும் சூழ்நிலையில்  சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பெத்திக்குட்டை வனபகுதியில் இருபதுக்கும் மேற்பட்ட யானைகள் வலம் வரும் காட்சிகளை வனத்துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.


வனத்துறையினர் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 22 யானைகள் வலம் வருவது தெரியவந்தது. அதில் யானைகள் கூட்டமாக உணவுகளை உட்கொள்வதும் வலசை பாதைகளில் செல்லக்கூடிய காட்சிகள் மிக அழகாக பதிவாகியுள்ளன.


 

 

Previous Post Next Post